< Back
மாநில செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
1 July 2022 1:08 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 48). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பார் ஒன்றில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த வெங்கடேஷ், செல்லும் வழியில் உள்ள தரை கிணறு ஒன்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடமான தரை கிணற்றில் இருந்து அவரது உடலை தீயணைப்பு அலுவலர் முத்து தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பாதிரிவேடு போலீசார் சந்தேக சாவாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்