செங்கல்பட்டு
தூண்டில் போட்டு மீன் பிடிக்கும்போது கோவில் குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
|தூண்டில் போட்டு மீன் பிடிக்கும்போது கோவில் குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கூலித்தொழிலாளி
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ராணி அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 35). கூலித்தொழிலாளி. கடந்த ஒரு வார காலமாக சரியான முறையில் வேலை இல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில் நந்தீஸ்வரர் கோவில் குளத்தில் நேற்று தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண்டிருந்தார்.
சாவு
அப்போது திடீரென குளத்தில் தவறி விழுந்து மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பொதுமக்கள் மறைமலை நகர் தீயணைப்பு துறை மற்றும் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று குளத்தில் மூழ்கி இறந்து போன பாஸ்கரின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.