< Back
மாநில செய்திகள்
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
திருவாரூர்
மாநில செய்திகள்

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
26 Oct 2023 12:45 AM IST

திருவாரூரில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

திருவாரூர்;

திருவாரூரில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

விழுந்தாா்

திருவாரூர் அருகே பெருங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது54). விவசாய கூலித்தொழிலாளியான இவர் நேற்று திருவாரூர் சாமி மடத்தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார். பின்னர் மரத்தை விட்டு இறங்கிய போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

பரிதாப சாவு

உடனே அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து பக்கிரிசாமியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பக்கிரிசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்