< Back
மாநில செய்திகள்
2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
சென்னை
மாநில செய்திகள்

2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

தினத்தந்தி
|
31 Jan 2023 1:50 PM IST

ஆதம்பாக்கத்தில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் மகாலட்சுமி நகர் 6-வது குறுக்கு தெருவில் புதியதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு திருவண்ணாமலை அடுத்த பொன்னாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 42) என்பவர் அங்கேயே தங்கி சென்டரிங் வேலை பார்த்து வந்தார்.

முருகன் நேற்று முன்தினம் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 2-வது மாடியில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் மதுபோதையில் தள்ளாடியபடி வந்த முருகன், திடீரென 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் தலையில் படுகாயம் அடைந்த முருகன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்