< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
|28 July 2022 8:52 AM IST
மேடவாக்கத்தில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
மேற்கு வங்க மாநிலம் கணேஷ்பூர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் தாஸ் (வயது 22). கட்டிடத்தொழிலாளியான இவர், மேடவாக்கம் காயத்ரி நகர் ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் 2-வது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் மார்பு மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்த சுகுமார் தாஸ், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.