< Back
தமிழக செய்திகள்
எர்ணாவூரில் 13-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
சென்னை
தமிழக செய்திகள்

எர்ணாவூரில் 13-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
23 May 2023 11:59 AM IST

எர்ணாவூரில் 13-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சவுரஜ்குமார் (வயது 35). பிளம்பரான இவர், கடந்த 1 வருடமாக தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சவுரஜ்குமார் வழக்கம்போல் நேற்று எர்ணாவூர் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடத்தின் 13-வது மாடியில் பிளம்பிங் வேலை செய்து வந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சவுரஜ்குமார் கால் தவறி 13-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சவுரஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த எண்ணூர் போலீசார், பலியான சவுரஜ் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சவுரஜ்குமாரின் மனைவி கீதாஞ்சலி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்