< Back
மாநில செய்திகள்
கோவில் கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி
திருச்சி
மாநில செய்திகள்

கோவில் கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
2 Jan 2023 1:49 AM IST

கோவில் கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.

தா.பேட்டை:

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே உள்ள ஜடமங்கலம் கிராமம் ஒட்டர்தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 43). கூலி தொழிலாளி. இவர் நேற்று வழக்கம்போல் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் ஜடமங்கலம்- பவித்திரம் சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான கிணற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தடுமாறி கிணற்றுக்குள் விழும்போது தலையில் காயம் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து அப்பகுதியினர் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி பெருமாளை சடலமாக மீட்டனர்.

இது குறித்து தா.பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலேந்திரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து பெருமாள் உடலை பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்துபோன பெருமாளுக்கு செல்வி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். புத்தாண்டு தினத்தன்று தா.பேட்டை அருகே கிணற்றுக்கு குளிக்க சென்றவர் தடுமாறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்