கன்னியாகுமரி
சுசீந்திரத்தில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி
|சுசீந்திரத்தில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியானார். அண்ணன் படுகாயமடைந்தார்.
மேலகிருஷ்ணன்புதூர்:
சுசீந்திரத்தில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியானார். அண்ணன் படுகாயமடைந்தார்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
தொழிலாளி
நாகர்கோவில் இந்து கல்லூரி சாலையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 32), தொழிலாளி. இவருடைய அண்ணன் நேசமணி (38) பால்குளத்தை அடுத்த வட்டக்கோட்டை அருகில் வசித்து வருகிறார்.
நாகர்கோவிலில் இருந்து செல்வகுமார் மோட்டார் சைக்கிளில் வட்டக்கோட்டைக்கு புறப்பட்டார். பின்னால் அண்ணன் நேசமணி உட்கார்ந்து பயணம் செய்தார்.
பஸ் சக்கரத்தில் சிக்கி பலி
சுசீந்திரம் பழைய பாலம் வளைவு பகுதிக்கு செல்வகுமார் வந்த போது, முன்னால் நாகர்கோவிலில் இருந்து ரஸ்தாகாடு நோக்கி அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சை முந்தி செல்ல முயன்ற போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. இதில் மோட்டார் சைக்கிளுடன் செல்வகுமார், நேசமணி ஆகிய2 பேரும் கீழே விழுந்தனர். இதில் அரசு பஸ் சக்கரத்தில் செல்வகுமார் சிக்கி கொண்டார். இதனால் அவர் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் நேசமணியும் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும், சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நேசமணியும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.