< Back
மாநில செய்திகள்
அம்பத்தூர் அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
சென்னை
மாநில செய்திகள்

அம்பத்தூர் அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

தினத்தந்தி
|
5 Sept 2023 8:30 PM IST

அம்பத்தூர் அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

அம்பத்தூர்-பட்டரைவாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற ஆண் ஒருவர், அந்த வழியாக சென்ற மின்சார ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பெரம்பூர் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் பலியானவர், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நசீம் கான் (வயது 42) என்பதும், சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரிந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு நசீம்கான் உடலை அவரது உறவினர்களிடம் ேபாலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்