< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
வாகனம் மோதி தொழிலாளி சாவு
|29 Aug 2022 8:08 PM IST
பழனி அருகே, மொபட் மீது வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பழனி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிங்கராஜ் (வயது 45). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர், மொபட்டில் கணக்கன்பட்டி சென்றுவிட்டு கஞ்சநாயக்கன்பட்டிக்கு திரும்பி கொண்டிருந்தார். கணக்கன்பட்டி வளைவு பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த வாகனம், மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் சிங்கராஜ் படுகாயம் அடைந்தார். தகவலறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.