< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் சாமி தரிசனம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
29 Aug 2023 1:42 PM IST

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு நாடாளுமன்ற நிலைக்குழுவைச் சேர்ந்த ஏ.கே.பி.சின்னராஜ், கீதாபென், தலாரி ரெங்கையா, நரேந்திரகுமார், முகம்மது ஜாவித் உள்பட 11 எம்.பி.க்கள் வருகை தந்தனர். வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்த அவர்களை அறநிலையத்துறை காஞ்சீபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன்பாரதி, கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அவர்கள் காஞ்சீபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் உள்பட பல கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். வரும் வழியில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேந்தமங்கலம் அரசுப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட சமையல் கூடத்தையும் அவர்கள் பார்வையிட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்