< Back
மாநில செய்திகள்
சேந்தமங்கலம் அருகேதேர் சக்கரத்தில் சிக்கிய தொழிலாளி சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

சேந்தமங்கலம் அருகேதேர் சக்கரத்தில் சிக்கிய தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
2 Jun 2023 12:15 AM IST

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சிவகுமார் (வயது 46) என்பவர் பங்கேற்று தேரை இழுத்தார். அந்தசமயம் அவர் எதிர்பாராதவிதமாக தேரில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சிவகுமாரை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிவகுமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த சிவகுமாருக்கு சுதா (42) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்