நாமக்கல்
விஷம் குடித்த தொழிலாளி சாவு
|எருமப்பட்டி அருகே விஷம் குடித்த தொழிலாளி இறந்தார்.
எருமப்பட்டி
எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் வீரக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வசித்து வந்தவர் திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நாகையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா (வயது 45). இவரது மனைவி வானீஸ்வரி (38). இவர்கள் அங்கேயே தங்கி தோட்ட வேலை செய்து வந்துள்ளனர். இந்தநிலையில் இளையராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது போதையில் இருந்த அவர் தோட்டத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக தெரிகிறது. மயங்கி கிடந்த அவரை, அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு பரிசோதனை செய்த டாக்டர் இளையராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.