< Back
மாநில செய்திகள்
கார் மோதி தொழிலாளி சாவு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கார் மோதி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
13 April 2023 3:14 AM IST

கார் மோதி தொழிலாளி இறந்தார்.

நாங்குநேரி:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகிலுள்ள படலையார்குளத்தில் வசித்தவர் செல்லத்துரை (வயது 70). கூலி தொழிலாளி. இவர் தனது சொந்த ஊரான நாங்குநேரி பரப்பாடி ரோட்டில் உள்ள ஏமன் புதுக்குளத்திற்கு கடந்த 5-ந் தேதி சித்தூர் திருவிழாவிற்காக வந்திருந்தார். அப்போது ஏமன் புதுக்குளம் பஸ் நிறுத்தம் அருகில் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்லத்துரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று செல்லத்துரை உயிரிழந்தார். இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்