< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு
தென்காசி
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
24 March 2023 12:15 AM IST

சிவகிரி அருகே, மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி இறந்தார்.

சிவகிரி:

சிவகிரி அருகே தேவிபட்டணம் ஆசாரி மேட்டுத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் நல்லமுத்து (வயது 38). இவர் கட்டிடம் கட்டும் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி தங்கமாரி (30) என்ற மனைவியும், தங்கலட்சுமி (9) என்ற மகளும், மணிகண்டன் (7) என்ற மகனும் உள்ளனர்.

நல்லமுத்து நேற்று தேவிபட்டணம் வடக்கு காமராஜர் காலனியில் ஒரு வீட்டில் கட்டிட பணியில் ஈடுபட்டு இருந்தார். மதியம் 1 மணி அளவில் வீட்டில் மாடி முகப்பு பகுதியில் இரும்பு மட்டைக்கம்பு வைத்து வேலையை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் செல்லும் மின்சார கம்பியில் இரும்பு மட்ைடக்கம்பு உரசியதால் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் இறந்தார்.

இதுகுறித்து அவரது தம்பி மணிகண்டன் சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்சாரம் தாக்கி இறந்த நல்லமுத்துவின் உடலை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்