< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
|13 Feb 2023 12:15 AM IST
சேந்தமங்கலம் அருகே சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை வடுகப்பட்டியில் இருந்து கொண்டமநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஒரு சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து முருகன் உடலை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் முருகன் மது போதையில் இருந்ததாகவும் சாக்கடையின் மேல் உள்ள பாலத்தில் படுத்திருந்த போது தவறி சாக்கடை கால்வாயில் விழுந்ததால் இறந்து விட்டதாகவும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.