< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
விபத்தில் கட்டிட தொழிலாளி சாவு
|22 Nov 2022 12:07 AM IST
வெப்படை அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
குமாரபாளையம்
பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படையைச் சேர்ந்தவர் காளியப்பன். (வயது 35). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வெப்படையில் உள்ள மக்கிரிபாளையம் பிரிவு ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே சென்ற அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் ஒன்று இவர் மீது மோதியது. இதில் காளியப்பன் தலையில் படுகாயம் அடைந்து கிடந்தார். அதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காளியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.