< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
தொழிலாளி சாவு
|31 Aug 2022 2:08 AM IST
மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள மிட்டாதார்குளத்தை சேர்ந்தவர் டேவிட் ராஜா (வயது 34). திருமணம் ஆகாதவர். விறகு கரிமூட்டும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தம்பி டென்சிங் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.