< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
தொழிலாளி சாவு
|3 Aug 2022 3:02 AM IST
விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சாவு
நெல்லை அருகே சீவலப்பேரி பொட்டல் பச்சேரி காலனி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் முருகராஜ் (வயது 29). செங்கல் சூளை தொழிலாளி. இவர் கடந்த 23-ந்தேதி நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். பாளையங்கோட்டை- சீவலப்பேரி மெயின் ரோடு மணிகூண்டு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முருகராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முருகராஜ் உயிர் இழந்தார். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.