< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
பஸ் மோதி தொழிலாளி சாவு
|26 July 2022 11:40 PM IST
ஓசூரில் பஸ் மோதி தொழிலாளி இறந்தார்.
ஓசூர்
ஓசூர் பேரண்டப்பள்ளி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியப்பா (வயது45). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர், மோட்டார்சைக்கிளில் குமுதேப்பள்ளி பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் முனியப்பா ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த முனியப்பா மீது அந்த வழியாக வந்த அரசு விரைவு பஸ் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.