< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்துதவறி விழுந்து தொழிலாளி சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்துதவறி விழுந்து தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
20 Oct 2023 12:15 AM IST

நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சந்திரன் (வயது55). கூலித்தொழிலாளி. இவர் நேற்று தனது மகன் சிவசக்தியின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார். நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை வீசாணம் பிரிவு அருகே சென்றபோது திடீரென பிரேக் போட்டு உள்ளார். இதில் வாகனத்தின் பின்பக்க டயர் வெடித்து இருவரும் கீழே தவறி விழுந்தனர்.

இதில் தலையில் படுகாயம் அடைந்த சந்திரனை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்