< Back
மாநில செய்திகள்
கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாப சாவு
தென்காசி
மாநில செய்திகள்

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாப சாவு

தினத்தந்தி
|
10 Sept 2023 12:15 AM IST

பனவடலிசத்திரம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

பனவடலிசத்திரம்:

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 40). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ராமாத்தாள் (35). இந்த தம்பதிக்கு கனிஷ்கா (9) என்ற மகள் உள்ளார். லட்சுமணன் தனது மனைவியின் ஊரான பனவடலிசத்திரம் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு அவர் புதிதாக வீடு கட்டி வந்தார். அங்கு கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லட்சுமணன் அங்கு சென்றபோது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சங்கரன்கோவில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டனர். தேவர்குளம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்