தர்மபுரி
மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி சாவு
|பாப்பிரெட்டிப்பட்டி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி:-
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்.
தொழிலாளி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 40) கூலி தொழிலாளியான இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் அவர் மதுவுக்கு அடிமையானதாக தெரிகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல் வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டதாக தெரிகிறது.
நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ராஜா வீட்டுக்கதவை தட்டி பார்த்தனர். திறக்கப்படவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு மது பாட்டிலும், விஷ பாட்டிலும் கிடந்தது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயன் ஏ.பள்ளிபட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, ராஜா மனைவியை பிரிந்து வாழ்ந்த விரக்தியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
உடனே ராஜா உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருந்தாலும் ராஜா தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.