< Back
மாநில செய்திகள்
நாமகிரிப்பேட்டை அருகே  பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமகிரிப்பேட்டை அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
18 Aug 2022 10:07 PM IST

நாமகிரிப்பேட்டை அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள புதுச்சத்திரம் ஒன்றியம் ராஜா கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 70). கூலித்தொழிலாளி. இவர் தற்போது நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காமராஜ் நகர், நாரைக்கிணறு பிரிவு ரோடு பகுதியை சேர்ந்த அவருடைய தம்பி முருகேசன் (60) வீட்டில் கடந்த 3 மாதங்களாக வாழ்ந்து வந்தார்.

இவர் நாரைக்கிணறு பிரிவு சாலையில் உள்ள சிறிய பாலத்தின் மீது அமர்ந்திருந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென அவர் நிலைதடுமாறி பாலத்தில் இருந்து 15 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த வரதராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்த வரதராஜனுக்கு சின்ன பாப்பு என்ற மனைவியும், மணிகண்டன் மற்றும் சங்கர் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இதுகுறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதராஜனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்