< Back
மாநில செய்திகள்
மோகனூர் அருகே  கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
நாமக்கல்
மாநில செய்திகள்

மோகனூர் அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

தினத்தந்தி
|
10 July 2022 10:55 PM IST

மோகனூர் அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

மோகனூர்:

மோகனூர் அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.

கூலித்தொழிலாளி

மோகனூர் அருகே உள்ள ராசிபாளையம் ஊராட்சி இந்திரா நகரை சேர்ந்தவர் மருதவேல் (வயது 50). லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரியில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார். மருதவேலுக்கு, ராஜேஸ்வரி என்ற மனைவியும், விக்னேஷ், சங்கர் என்ற மகன்களும், கலைவாணி என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் மருதவேல் பணி நேரம் போக அணியாபுரம் பகுதியில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பகுதி நேர கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த 8-தேதி அணியாபுரத்தில் புதிதாக கட்டப்படும் ஒரு வீட்டிற்கு மேல்தளத்தில் இருந்து சுவற்றுக்கு தண்ணீர் விட்டு கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.

விசாரணை

இதையடுத்து அங்கிருந்தவர்கள் மருதவேலுவை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மருதவேல் இறந்தார். இதுகுறித்து ராஜேஸ்வரி மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்