< Back
மாநில செய்திகள்
மது என நினைத்து விஷம் அருந்திய தொழிலாளி சாவு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

மது என நினைத்து விஷம் அருந்திய தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
7 Jun 2022 9:44 PM IST

ஓசூரில் மது என நினைத்து விஷம் அருந்திய தொழிலாளி இறந்தார்.

ஓசூர்:

ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30), கட்டிட தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று ரமேஷ் மது என்று நினைத்து தவறுதலாக விஷத்தை குடித்து விட்டார். இதில் மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்