< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
கிணற்றில் தொழிலாளி பிணம்
|23 July 2023 1:24 AM IST
கிணற்றில் ெதாழிலாளி பிணம் மீட்கப்பட்டது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 24). கூலி தொழிலாளியான இவர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் கூமாபட்டிக்கு வந்த மகாலிங்கம் நீதிமன்றத்தில் வக்கீலை பார்ப்பதற்காக சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது அவர் நீாில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மகாலிங்கத்தின் உடலை மீட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.