< Back
மாநில செய்திகள்
தீக்குளித்து தொழிலாளி தற்கொலை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
26 Jun 2023 1:19 AM IST

ஒரத்தநாட்டில் மகன் வெளிநாடு செல்லாததால் விரக்தி அடைந்த தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்

ஒரத்தநாட்டில் மகன் வெளிநாடு செல்லாததால் விரக்தி அடைந்த தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

வெளிநாடு செல்லவில்லை

ஒரத்தநாடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது60). கூலித்தொழிலாளி. இவரது மகன் பூவிழிராஜா சமீபத்தில் வெளிநாடு செல்வதற்காக பணம் கட்டி உள்ளார். அதன்படி வெளிநாடு செல்ல முடியாமலும், கட்டிய பணத்தையும் வாங்க முடியாமல் இருந்துள்ளார். மகன் வெளிநாடு செல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்த மகாலிங்கம் சம்பவத்தன்று வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

இதில் தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய மகாலிங்கத்தை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாலிங்கம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்