< Back
மாநில செய்திகள்
தீக்குளித்து தொழிலாளி தற்கொலை
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
14 July 2022 9:49 PM IST

தந்தை கண்டித்ததால் தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

திருவண்ணாமலை மாதலம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 23), கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில தினங்களாக சரிவர வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 8-ந் தேதி பிரகாசை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்