< Back
மாநில செய்திகள்
குழித்துறை அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குழித்துறை அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

தினத்தந்தி
|
12 Aug 2023 9:36 PM IST

குழித்துறை அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

களியக்காவிளை:

குழித்துறை அருகே உள்ள நெல்லிவிளையை சேர்ந்தவர் எல்ஜின் (வயது33), கூலித்தொழிலாளி. இவருக்கு ஸ்டெல்லா (30) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக எல்ஜின் இளைய மகளுடன் தனியாக பிரிந்து சென்று இன்னொரு வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த எல்ஜின் தன்மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

----

மேலும் செய்திகள்