< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை
|15 March 2023 10:22 PM IST
திண்டுக்கல் அருகே ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி அருகே ரெயில் தண்டவாளத்தில் நேற்று ஒரு ஆணின் உடல் சிதைந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் திண்டுக்கல் அங்குவிலாஸ் இறக்கம் பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி மணிகண்டன் (வயது 42) என்பது தெரியவந்தது. இவருக்கு மலர் என்ற மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறால் விரக்தியடைந்த மணிகண்டன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.