< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
|12 July 2022 11:59 PM IST
குடியாத்தத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குடியாத்தம் கஸ்பா புதுமனை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38), கூலி தொழிலாளி. நேற்று காலையில் கஸ்பா சுடுகாடு அருகே உள்ள குப்பை கொட்டும் இடத்தில் உள்ள கூரையில் வெங்கடேசன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொது மக்கள் பார்த்து உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.