< Back
மாநில செய்திகள்
மனைவி வேறுநபருடன் சென்றதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
சேலம்
மாநில செய்திகள்

மனைவி வேறுநபருடன் சென்றதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
5 July 2022 4:05 AM IST

மனைவி வேறுநபருடன் சென்றதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேச்சேரி:

மேச்சேரி அருகே உள்ள அரங்கனூரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 31). கட்டிடத்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இதனிடையே இளங்கோவன் மனைவி, தனது மகளுடன் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இளங்கோவன் மனவேதனை அடைந்தார். மேலும், தனது மனைவி, குழந்தையை மீட்டு தரும்படி அவர் மேச்சேரி போலீசில் புகார் அளித்தார். இந்தநிலையில் மனைவி வேறு நபருடன் சென்ற வேதனையில் இளங்கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இளங்கோவன் இறந்தார். இந்த சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்