< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
|17 Sept 2022 4:50 PM IST
திருவள்ளூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் விடையூர் புதிய காலனியை சேர்ந்தவர் அன்பரசு (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இதுநாள் வரை குழந்தை இல்லை.
இதனால் அவர் கடந்த சில மாதங்களாக தனக்கு குழந்தை இல்லையே என்ற மன உளைச்சலில் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த அன்பரசு மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.