< Back
மாநில செய்திகள்
திருமணம் ஆகாத விரக்தியில் தொழிலாளி தற்கொலை
அரியலூர்
மாநில செய்திகள்

திருமணம் ஆகாத விரக்தியில் தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
25 April 2023 12:11 AM IST

வி.கைகாட்டி அருகே திருமணம் ஆகாத விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருமணம் ஆகாததால் விரக்தி

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள கோப்பிலியன்குடிகாடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் அசோக் (வயது 32). இவர் அரசு சிமெண்டு ஆலையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அசோக்குக்கு 32 வயது ஆகியும் திருமணம் ஆகாததால் விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அசோக் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்துக் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சாவு

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்