< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
|21 Feb 2023 1:07 PM IST
சென்னை அருகே மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த புழல் புத்தகரம் சுபாஷ் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் தணிகாசலம்(வயது 39). வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி லோகேஸ்வரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.
குடும்ப தகராறு காரணமாக லோகேஸ்வரி கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தாய் வீடான ஆவடிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த தணிகாசலம் வீட்டில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.