செங்கல்பட்டு
காட்டாங்கொளத்தூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
|காட்டாங்கொளத்தூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர், செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கடந்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் செல்வராஜ் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சமீப காலமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் செல்வராஜ் தூக்குப்போட்டு கொண்டார். அவர் நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த செல்வராஜை அவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே செல்வராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.