< Back
மாநில செய்திகள்
தக்கலை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தக்கலை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
24 May 2023 12:26 AM IST

தக்கலை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தக்கலை,

தக்கலை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது37), கூலித்தொழிலாளி. இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு நெய்யூரை சேர்ந்த சசிகலா (33) என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நெய்யூரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவர் தனது அம்மா வீட்டிற்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு முளகுமூட்டிற்கு வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் அவரது தாயார் வெளியே சென்ற நேரத்தில் வீட்டு கூரையில் கம்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார். வெளியே சென்றிருந்த தாயார் வீட்டிற்கு வந்த போது ராஜ்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்