< Back
மாநில செய்திகள்
குலசேகரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குலசேகரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
17 May 2023 12:45 AM IST

குலசேகரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குலசேகரம்:

குலசேகரம் அருகே உள்ள நாகக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது35), கூலி தொழிலாளி. இவருக்கு சுதி (34) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். ஜெகனுக்கு மது பழக்கம் உண்டு. மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் இவருடைய மனைவி குழந்தைகளுடன் திற்பரப்பில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கியுள்ளார். இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்புற்ற ஜெகன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ேமலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்