< Back
மாநில செய்திகள்
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
12 May 2023 12:15 AM IST

ெகால்லங்கோடு அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே உள்ள வெங்கஞ்சி கொக்கரகுன்று வீட்டை சேர்ந்தவர் மோகனன் (வயது58). இவர் குழித்துறையில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தார். இவர் தனியார் வங்கியில் இருந்து ரூ.50 ஆயிரம் கடன் பெற்று செலவு செய்தார். இதுகுறித்து அவருடைய மனைவி புஷ்பம் கேட்டுள்ளார். இதனால் மோகனன் வேலைக்கு செல்லாமல் மருதங்கோடுகோணம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் புஷ்பம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர் ஆகியோர் மோகனனை பார்ப்பதற்கு மருதங்கோடுகோணம் பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கு மோகனன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்