< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
|11 April 2023 1:13 AM IST
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது 55). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகாத நிலையில், தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று அவரது வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், சரவணனின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.