< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
|22 March 2023 1:30 AM IST
அன்னதானப்பட்டி:-
சேலம் அன்னதானப்பட்டி அகத்தியர் தெருவை சேர்ந்தவர் சிவனேஸ்வரன் என்கிற சிவனேஷ் (வயது 40). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவருக்கு, சங்கீதா (34) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும், 2 மகன்களும் உள்ளனர். சிவனேசனுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர வேலை இல்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிவனேஷ் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் விரைந்து சென்று சிவனேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிவனேஷ் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.