< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
24 Feb 2023 12:49 AM IST

நாகர்கோவிலில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

நாகர்கோவில் கரியமாணிக்கபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணி (வயது 57), தொழிலாளி. இவருக்கு மது பழக்கம் உள்ளதாக தெரிகிறது. நேற்று முன்தினம் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்தார்.

இதனால் மணியை அவரது மனைவி கண்டித்தார். இதனால் மனமுடைந்த மணி வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்