< Back
மாநில செய்திகள்
சுசீந்திரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

சுசீந்திரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
1 Jan 2023 11:47 PM IST

சுசீந்திரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலகிருஷ்ணன்புதூர்:

சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் கஸ்தூரிபாய் பகுதியை சேர்ந்தவர் நீலப்பன் (வயது 65), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பார்வதி. கணவன்-மனைவி இடையே தகராறு நடந்ததால் அருகில் உள்ள மகள் வீட்டுக்கு பார்வதி சென்று தங்கினார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நீலப்பன் வீடு வழியாக பார்வதி சென்றார். அப்போது வீடு பூட்டியிருந்ததால் சந்தேகப்பட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு நீலப்பன் படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுபற்றி நீலப்பன் மகன் பாலமுருகன் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்யது இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்