< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
|14 Dec 2022 2:37 AM IST
கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
வடசேரி வாத்தியார்விளையை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 46). இவர் இறச்சகுளத்தில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஒரு தனியார் நர்சரி பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். மகேஷ்குமார் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கடனை செலுத்த முடியாமல் அவதிப்பட்ட அவர் வேலைக்கு செல்லாமல் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் மனைவி வேலைக்குச் சென்றபிறகு வீட்டில் தனியாக இருந்த மகேஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடசேரி போலீசார், மகேஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.