கன்னியாகுமரி
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
|தக்கலை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தக்கலை,
தக்கலை அருகே உள்ள அழகியமண்டபம், மருதவிளையை சேர்ந்தவர் லூக்காஸ் (வயது62) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இதையடுத்து லூக்காஸ் தனது மகன் சுரேஷ்குமாருடன் (30) வசித்து வந்தார். மகன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதால் லூக்காசை மருமகள் கவனித்து வந்தார். லூக்காசுக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்பு அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். இந்தநிலையில் மருமகள் பிரசவத்திற்காக அவரது தாயார் வீட்டிற்கு சென்றார்.
இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த லூக்காஸ் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் மனைவியின் கல்லறை அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரது மகனுக்கும், தக்கலை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.