திருநெல்வேலி
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
|தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்
திசையன்விளை:
திசையன்விளை கீழ பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 27). சென்னையில் உள்ள இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மகளுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக திசையன்விளை வந்து இருந்தார். இவரது மனைவி ராஜவேணி என்ற சுவேதா. இவர் திசையன்விளை வடக்குத்தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபம் பின்புறம் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சுதர்சன் அவரது மனைவியிடம் மது குடித்துவிட்டு தகராறு செய்துள்ளார். மனைவி அவரை பதிலுக்கு திட்டிவிட்டு வீட்டு மாடியில் தூங்க சென்றுவிட்டார். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் சுதர்சன் படுத்து தூங்கிய படுக்கை அறை திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மனைவி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.