கன்னியாகுமரி
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
|மார்த்தாண்டம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம் அரியூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 48), தச்சு தொழிலாளி. இவருடைய தம்பி கிருஷ்ணன் (45), பக்க வாத நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு திருமணம் ஆகவில்லை. அவர் தச்சு வேலைக்கு பெரும்பாலும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சிவகுமார் தம்பி கிருஷ்ணன் இருந்த அறைக்கு சென்றார். அங்கு அறைக்கதவு பூட்டப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து அறையின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு கிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து சிவகுமார் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.