< Back
மாநில செய்திகள்
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை  போலீஸ் எல்லை பிரச்சினையால் உடலை மீட்பதில் இழுபறி
சேலம்
மாநில செய்திகள்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் எல்லை பிரச்சினையால் உடலை மீட்பதில் இழுபறி

தினத்தந்தி
|
2 Nov 2022 1:49 AM IST

செவ்வாய்பேட்டையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் எல்லை பிரச்சினையால் உடலை மீட்பதில் இழுபறி ஏற்பட்டது.

சேலம்,

தொழிலாளி பிணம்

சேலம் செவ்வாய்பேட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 28). தொழிலாளி. இவர் நேற்று சந்தைபேட்டை பகுதியில் உள்ள திருமணிமுத்தாறு ஓடை அருகே மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இதுகுறித்து சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் முருகன் இறந்து கிடந்த இடம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

எல்லை பிரச்சினை

அதைத்தொடர்ந்து அந்த இடத்துக்கு அன்னதானப்பட்டி போலீசார் சென்றனர். அவர்கள் இந்த இடம் தங்களுக்கு வராது என்றும், செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தான் வரும் என்றும் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். இந்த எல்லை பிரச்சினையால் வாலிபரின் உடலை மீட்பதில் போலீசாரிடையே இழுபறி ஏற்பட்டது. இதனிடையே அந்த பகுதியில் அக்கம்பக்கத்தினர் ஏராளமானவர்கள் திரண்டனர்.

இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அவர்கள் உத்தரவின் பேரில் சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு செவ்வாய்பேட்டை போலீசார் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து முருகன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்