< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
|31 May 2022 6:17 PM IST
ஸ்ரீவைகுண்டம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நளன்குடி இசக்கியாபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் கீர்த்திக் (வயது 31). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். அவருக்கு கடன் இருந்துள்ளது. இதன் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.